ஆண்களே மனைவியிடம் இந்த விஷயத்த மட்டும் கடைபிடிச்சு பாருங்கள்…..!!ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான இவர்களுக்குள் சண்டை உருவாகிறது.ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அவர்களைப் பற்றிய கருத்துகளை முன் கூட்டியே முடிவு செய்து விடாதீர்கள்.இவள் இப்படித்தான்.. இவர் இப்படித்தான்! என்று முடிவு செய்துவிட்டால் அதன் பிறகு அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் தவறாகத்தான் தெரியும்.

உங்கள் கருத்துக்களுக்கு உங்களுடைய துணை முரண்பட்டு இருந்தாலும் ஒரு நாள் அமர்ந்து ஆரோக்கியமான விவாதமாக அதனை எடுத்து சென்றால் அந்த விஷயத்தில் இருவரில் யாருடைய கருத்து சரி என்பதை உணரவும், உணர்த்தவும் வேண்டும்.மனைவியை அல்லது கணவனை ஒரு போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிற உங்களுடைய கருத்தை மற்றவர்களுடன் ஒப்பிட்டு கூறாமல், நீ இப்படி இருந்தால் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் தெரியுமா? என்பது போன்ற பாவனையில் எடுத்துக் கூறலாம்.

மேலும், அவர்களை அறியாமல் எப்போதாவது உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டிருக்கலாம். அந்த விஷயத்தை சுட்டிக்காட்டி அன்று நீ இப்படி நடந்து கொண்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.அதைத்தான் உன்னிடம் எதிர்பார்த்தேன் என்று கூறலாம். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக கூறும் பொழுது தான் புரிதல் ஏற்படும்.எதிர்மறையாக கூறிவிட்டால் உங்கள் மேல் இருக்கும் மதிப்பு குறையும், அன்பும் தானாகவே மாறிவிடும்.அடுத்ததாக, எல்லா விஷயங்களிலும் உங்கள் துணை தான் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

அவர்கள் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள்? அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை ஒரு முறையாவது நிதானமாக அமர்ந்து சிந்தித்து பார்க்க வேண்டும்.விட்டுக் கொடுப்பதில் தான் வாழ்க்கை அடக்கியுள்ளது. விடாப்பிடியாக இருந்தால் திருமண பந்தத்தில் இனிமையை காண முடியாது.நீங்கள் ஒரு விஷயத்தை விட்டுக் கொடுத்தால் அவர்கள் இரண்டு விஷயங்களை விட்டுக் கொடுப்பார்கள் அது தான் பெண்களிடம் இருக்கும் சூட்சுமமான குணமாகும்.

hey