வவுனியாவில் உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்கு இலக்காகிய கனரக வாகனம்வவுனியா – புளியங்குளம் பகுதியில் கனரக வாகனமொன்று உயர் அழுத்த மின்சார தூணுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் கனரக வாகனத்தின் சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.

பொலன்னறுவையில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற கனரக வாகனம் புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கனரக வாகனமும், மின்சார தூணும் பாரிய சேதங்களுக்கு இலக்காகியுள்ளன.
விரைந்து செயற்பட்ட மின்சார சபையினர் மின் வழங்கலை துண்டித்தமையால் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

hey