வவுனியாவில் இரவு இடம்பெற்ற துயரம் : பரிதாபகரமாக பறிபோன இளைஞனின் உயிர்வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்றவிபத்தில் இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்…

புளியங்குளம் முல்லைத்தீவு பிரதானவீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் தண்டுவான் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதிக்கரையில் இருந்த மின்சாரத்தூணுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணி கரடிப்புலவு பகுதியைசேர்ந்த தயாபரன் வயது 31 என்ற இளைஞர் உ யிரிழந்துள்ளதுடன், மற்றய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

hey