வவுனியாவில் மேலும் அதிகரித்த கொரோனா : வடக்கில் இன்று 22 பேருக்கு தொற்று உறுதிவடக்கில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 373 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதில், மன்னார் வெள்ளாங்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 9 பேரும், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும், முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், மன்னார் பொது வைத்தியசாலையில் 2 பேரும்,

மன்னார் கடற்படை முகாமில் ஒருவரும், கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

hey