கொரோனா பரவலுக்கு பிந்தைய காலத்தில் இலங்கையில் சேவைகளை முன்னெடுக்க இரண்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதிகொரோனா பரவலுக்கு பிந்தைய காலத்தில் இலங்கையில் சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் மேலும் இரண்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

Daily FT வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தற்போதுள்ள சர்வதேச விமான சேவைகளில் சேர எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் மற்றும் மாலத்தீவு ஏர்லைன்ஸுக்கு இலங்கை சிவில் ஏவியேஷன் ஆணையம் (CAASL) அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை சிவில் ஏவியேஷன் ஆணையத்தினால் பெறப்பட்ட ஆறு விண்ணப்பங்களில் இருந்து இரண்டு புதிய விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இரண்டு புதிய விமான நிறுவனங்களின் ஒப்புதல் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கேரியர்களின் எண்ணிக்கையை சுமார் 40 ஆக உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்திய குறைந்த கட்டண விமான நிறுவனமான GoAir இன் ஒப்புதல், பங்களாதேஷ் சரக்கு விமான நிறுவனமான ஸ்கை கேபிடல் ஏர்லைன்ஸ், அவுஸ்திரேலிய குறைந்த கட்டண விமான நிறுவனம் ஜெட்சர், பாகிஸ்தானின் சரக்கு கேரியரான ஏர் பால்கன் மற்றும் குவைத்தைச் சேர்ந்த ஜசீரா ஏர்வேஸ் விமான நிறுவனங்களின் கோரிக்கை நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey