நயன்தாராவின் மேக்கப் மேனுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?நடிகை நயன்தாரா தனது மேக்கப் கலைஞ்சர்களுக்காக லட்சக்கணக்கில் தயாரிப்பாளர்களின் பணத்தை செலவு செய்கிறார் என்று தயாரிப்பாளர் ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, இப்போ எல்லா நடிகர்களும் பாடிகாட் வைத்திருக்கிறார்கள், படப்பிடிப்பில் அவர்களுக்கு என்ன பாடிகார்டு தேவை உள்ளது.

அதே போல நடிகை நயன்தாரா, ஆண்ட்ரியா முதற்கொண்டு சில நடிகைகள் மேக்கப், சிகை அலங்காரம் என 5,6 உதவியாளர்களை விமானத்தில் வர வைத்துக்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு சம்பளம் தயாரிப்பாளர்கள்தான் தரணும் .ஏன் இங்கு யாரும் உதவியாளர்கள் இல்லையா? அவர்கள் தலை முடி என்ன தங்கத்துலயா இருக்கு.அவங்களுக்கு ஒரு நாள் செலவு ஒரு லட்சம் என்கிறார்கள். 50 நாட்கள் படப்பிடிப்பு என்றால் 50 லட்சம் ரூபாய் அதுக்கே போய்விடும்.

இது யாரையும் குறை சொல்வதற்காக அல்ல தயாரிப்பாளர்கள் இதுபோன்ற செலவுகளை மிச்சப்படுத்தினாலே நஷ்டத்திலிருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம் என்று ராஜன் தெரிவித்துள்ளார்.

hey