வவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 284 ஆக அதிகரிப்புவவுனியா பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதில் கடந்த இரு வாரத்தில் மாத்திரம் 284 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் இன்று (20.01) மாலை வெளியான பி.சி.ஆர் பரிசோதனையில் 25 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்தவர்கள் உட்பட 25 நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

hey