நீர் மற்றும் மின்சாரம் கட்டணங்களை செலுத்துவதற்கு சலுகை காலம் அறிவிப்புசுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள திரையரங்குகளுக்கும் மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை செலுத்துவதற்கு அமைச்சரவை நேற்று நிவாரணம் வழங்கியுள்ளது.

இதன்மூலம், மின்சார பட்டியல் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு சலுகை காலம் வழங்கப்பட்டது.

மேலதிகமாக, குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்புடைய மின்சார கட்டணங்களை செலுத்துவதற்காக தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் உள்நாட்டு, வணிக மற்றும் தொழில்துறை மின்சார நுகர்வோருக்கு இடையூறு இல்லாமல் மின்சாரம் வழங்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

மேலும், தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட திரைப்பட திரையரங்குகளுக்கு தங்களின் மின்சார கட்டணங்களை 2020 மார்ச் முதல் டிசம்பர் வரை 12 சம தவணைகளில் தடையின்றி மின்சார இணைப்புடன் செலுத்த ஒரு வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இன்ஸ் நிறுவனங்களுக்கு 2020 மார்ச் முதல் 2021 பிப்ரவரி வரை மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை செலுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.

இது குறித்த யோசனையை சுற்றுலா மற்றும் மின் சக்தி அமைச்சர்கள் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

hey