வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் வழமைக்கு அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பம்வவுனியா மாவட்டத்தில்

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து காணப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக வவுனியாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டிருந்ததுடன் சில பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிந்தன.

அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் கடந்த 12.01.2021 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கொவிட்19 அவசர கால நிலமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று மாவட்டத்தின் சில பகுதிகளை 24ம் திகதி வரை தனிமைப்படுத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வவுனியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரவேசிக்கும் பகுதிகளான நெளுக்குளம் சந்தி , தாண்டிக்குளம் சந்தி ,மாமடுவ சந்தி ,பூந்தோட்டம் சந்தி , கண்டி வீதி இரானுவ முகாம் சந்தி ஆகிய இடங்களில் உள்ளடக்கிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

இந் நிலையில் வவுனியா பஜார் வீதி , தர்மலிங்கம் வீதி , சந்தை சுற்றுவட்ட வீதி , மில் வீதி , சூசைப்பிள்ளையார் குள வீதி , கந்தசுவாமி வீதி போன்றவற்றினை தவிர்ந்த ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட ஏனைய இடங்கள் இன்று 18.01.2021 திங்கட்கிழமை காலை முதல் வழமைக்கு திரும்பியதுடன் வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

hey