வவுனியா செட்டிக்குளத்தில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோ.துண்டு கோர வி.பத்து : ஆ.பத்தான நிலையில் ஒருவர்வவுனியா செட்டிகுளம்

வவுனியா செட்டிகுளம் பகுதியில் டிப்பர் ரக வாகனமும் மோட்டர் சைக்கிளும் மோதுண்டு வி.பத்துக்குள்ளானதில் ஒருவர் படுகா.யமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் பகுதியில் இன்று (18.01) காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ் வி.பத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் நகர் பகுதிக்கு செல்வதற்காக உள்ளூர் பாதையிலிருந்து செட்டிக்குளம் மன்னார் பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிலினை ஏற்ற முற்பட்ட சமயத்தில் செட்டிகுளம் மன்னார் பிரதான வீதியுடாக சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோ.துண்டு வி.பத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான அரசடிக்குளம் பகுதியை சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க நபர் படுகா.யமடைந்த நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் போக்குவரத்து பொலிஸார் வி.பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்

hey