இரண்டு மாதங்களின் பின்னர் வவுனியா ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்கொரோனா தொற்று அச்சம் காரணமாக தூர இடங்களுக்காக புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்டதுடன் மட்டுப்படுத்தப்பட்ட அலுவலக புகையிரத சேவைகள் மாத்திரம் இடம்பெற்று வந்திருந்தன.

இந் நிலையில் இரண்டு மாதங்களின் பின்னர் இன்று (17.01.2021) மாலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி விசேட புகையிரதம் சேவையினை ஆரம்பித்திருந்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து சேவையினை ஆரம்பித்த புகையிரதம் மாலை 6.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்து 6.35 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்தினை ஆரம்பித்தது.

நாளையதினம் தொடக்கம் தினசரி உத்தரதேவி, யாழ்தேவி ஆகிய புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதுடன் முதலாவதாக காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கு புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் யாழ் தேவி புகையிரதமும் சேவையினை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

காங்கேசன்துறையிலிருந்து காலை 5.30 மணிக்கு பயணித்தினை ஆரம்பிக்கும் உத்தரதேவி கடுகதி புகையிரதம் காலை 8.10 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து கொழும்பு நோக்கி பயணிக்கவுள்ளதுடன் காங்கேசன்துறையிலிருந்து காலை 9.00 மணிக்கு பயணித்தினை ஆரம்பிக்கும் யாழ் தேவி புகையிரதம் காலை 11.25 மணியளவில் வவுனியாவை வந்தடைந்து கொழும்பு நோக்கி பயணித்தினை ஆரம்பிக்கவுள்ளது.

hey