வவுனியா, பட்டாணிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுவவுனியா, பட்டாணிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 14 நாட்கள் பட்டானிச்சூர் பகுதி சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் 960 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரை தவிர்ந்த 864 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிதியினை பிரதேச செயலகத்தினர் கிராம அலுவலர் ஊடாக குறித்த கிராம மக்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக வழங்கி வருகின்றனர்.

hey