வவுனியா வைத்தியசாலை சிற்றூளியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பரிசோதனை கூடத்திலிருந்து இன்று (17.01.2021) இரவு 7.00 மணியளவில் வெளியான முடிவுகளின் அடிப்படையிலேயே இரு சிற்றூளியர்களுக்கும் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் இவ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 10 நாட்களிக்குள் வவுனியா மாவட்டத்தில் பட்டானிச்சூர் பகுதியில் 14 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 174 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 15 நபர்களும் புளியங்குளத்தில் 2 வர் என 205 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.

hey