வவுனியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று : மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று : 201 ஆக அதிகரிப்பு



வவுனியாவில் 24 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களை சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய 24 பேருக்கு தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டது.

வெளிக்குளம், தெற்கிலுப்பைக்குளம்,மகாறம்பைக்குளம் பட்டாணிசூர், வேப்பங்குளம், பட்டக்காடு கந்தசுவாமிகோவில்வீதி, வெளிக்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களிற்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர கொத்தணி ஒருவாரத்தில் மாத்திரம் 201 அதிகரித்துள்ளது

hey