வவுனியா பாவற்குளத்தினை பார்வையிட செல்லும் மக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைவவுனியா பாவற்குளத்தின்

வவுனியா பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டிருப்பதனால் குளம் வான் பாய்ந்து வருகின்றது.

வான் பாய்கின்றதனை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் செல்கின்றனர் பார்வையிடுவதற்காக வருகை தரும் மக்கள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்கின்றனர். குளத்தினை பார்வையிட வரும் மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குளத்தின் மேற்புறம் சிறுவர்கள் செல்வதனை குறைத்தல் மற்றும் ஆபத்தான பகுதிகளில் பொது மக்கள் செல்வதனையும் தவிர்க்க வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.

hey