வவுனியா – செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதிவவுனியா – செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ வீரர் காலி, பலப்பிட்டியவில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு விடுமுறையில் சென்றுவிட்டு கடந்த 31ஆம் திகதி மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு கடமைக்கு திரும்பியிருந்தார்.

இதன்போது அவர் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டமையல் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு யாழ். வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

hey