வவுனியாவில் மேலும் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : 152 ஆக தொற்றாளர்கள அதிகரிப்புவவுனியாவில் நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 3 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (14.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது

hey