தைப்பொங்கல் தின இராசி பலன்கள் 2021.01.14



மேஷம்: அனுபவப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரி நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கடகம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத் தில் மேலதிகாரி உங்களை நம்பி பொறுப் புகளை ஒப்படைப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பழைய சரக்குகள் விற்கும். வியாபாரத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

துலாம்: எதிர்பார்ப்புகள் சில தள்ளிப்போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருக்கு கருத்து மோதல்கள் வந்து செல்லும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.

விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு: கடந்த 2 நாட்களாக இருந்த அலைச்சல். டென்ஷன். கோபம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களை உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை பிரிந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

hey