கிளிநொச்சி இரணைமடு குளத்தினால் ஐந்து குடும்பங்கள் கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் இடம்பெயர்வுகிளிநொச்சி இரணைமடு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் தற்போது 37 அடி 05 அங்குலத்தை தாண்டும் நிலையில் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதால்அதிகளவு நீர் வெளியேறி வருகிறது.

இதனால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன முரசுமோட்டை ஐயன் கோயிலடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்ததால் ஐந்து குடும்பங்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளன.

இதேவேளை இந்தப் பிரதேசத்தில் மேலும் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதால் தமது கால்நடைகளையும் உடமைகளையும் கொண்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

வரத்து நீர் விகிதம் காரணமாக, இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும். எனவே முரசுமோட்டை, கண்டாவளை மற்றும் ஊரியான் பகுதிகளில் வாழும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது

hey