வவுனியாவில் மழையினால் 53 குடும்பங்கள் பாதிப்பு : 3 வீடுகள் பகுதியளவில் சேதம்வவுனியாவில்

வவுனியாவில் கடந்த மூன்று தினங்களாக தொடரும் மழை காரணமாக 53 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 03 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முனாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்துள்ளதுடன், குளத்து நீர்மட்டங்களும் உயர்வடந்துள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழ்ந்த 53 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 03 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அந்தவகையில் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 156 பேரும், வவுனியா பிரதேச செயலக பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 07 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 03 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் 04 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

பாதிப்படைந்தவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்தங்கள் ஏற்படின் அதைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

hey