வவுனியாவின் சில பகுதிகள் தனிமைப்படுத்தல் சட்டத்தினால் வெறிச்சோடிய நிலையில்வவுனியாவில்

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகள் நேற்று (13.01.2021) மாலை முதல் முழுமையான முடக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் எ9 வீதியில் நொச்சிமோட்டை பாலம், மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ்நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளே வரும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதுடன் 24ம் திகதி வரை குறித்த ஊரடங்கு சட்டம் நடைமுறை நீடிக்கப்படவுள்ளது.

அவசர தேவைகள், அத்தியவசிய தேவைகள், அரச ஊழியர்கள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையுடன் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதரும் பேருந்துகள், முடக்கப்பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

hey