வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தை அனுஸ்டிக்க சுகாதார பிரிவினர் தடை : மீறினால் தனிமைப்படுத்தலாம்சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்ததினம் இன்று (12.01.2021) உலகில் பல இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருவதுடன் எமது நாட்டின் பல பாகங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியினை நகரசபையினர் துப்புரவு செய்து பிறந்தநாளை அனுஸ்டிப்பதற்குறிய ஏற்பாடுகளை முன்னெடுத்த போதிலும் அதற்கு சுகாதார பிரிவினர் தடை விதித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 124 ஆக அதிகரித்துள்ளமையினால சுகாதார நடைமுறைகளுக்கமைய நிகழ்வினை நடத்த சுகாதார பிரிவினர் தடையுத்தரவு பிறப்பித்தமையுடன் மீறி நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று (12.01) காலை 8.30 மணியளவில் இடம்பெறவிருந்த சுவாமி விவேகானந்தரின் 158வது பிறந்ததினம் அனுஸ்டிப்பு நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

hey