வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒரு வாரத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்புவவுனியாவில் இன்று மாலை வெளியாகிய பிசீஆர் முடிவுகளில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒரு வாரத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு

வவுனியா, பட்டானிச்சூர் மற்றும் நகர வர்த்தக நிலைய பகுதியில் கடந்த வாரம் 62 பேரும், நேற்றைய (10.01) தினம் பட்டானிச்சூர், ஈச்சங்குளம், கெப்பற்றிக்கொலவ பகுதியைச் சேர்ந்த 8 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து வவுனியாவின் பல பகுதிகளும் முடக்கப்பட்டன. அத்துடன் அவர்களுடன் தொடர்புடைய பலரிடமும் பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை (11.01) வெளியாகிய பிசீஆர் முடிவுகளின் படி வவுனியா வடக்கில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இன்று மாலை (11.01) வெளியாகிய பிசீஆர் முடிவுகளில் வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவருக்கும், நெஞ்சுவலி காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்குமாக மேலும் இரண்டு பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் முதல் வவுனியாவில் 73 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி பிசீஆர் எடுக்கும் நடவடிக்கைகளில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

hey