முதல் பொண்டாட்டி இப்ப தங்கச்சியா…நடிக்க போகிறாரா..? கலக்குறீங்க போங்க ; கலாய்க்கும் ரசிகர்கள்மனைவியாக நடித்த நயன்தாரா

பிரபல முன்னணி நடிகருடன் போன வருடம் மனைவியாக நடித்த நயன்தாரா தற்போது அதே நடிகருக்கு தங்கச்சியாக நடிக்க உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

அம்மணிக்கு மட்டும் வயது ஏற ஏற மார்க்கெட்டும் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. படத்திற்கு படம் 2 கோடியை ஏற்றிக் கொண்டிருக்கிறார். முதலில் கமர்ஷியல் படங்களில் கிளாமர் காட்டி நடித்து வந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகி படங்களில் நடித்து வந்தார்.

அந்த படங்களும் தொடர் வெற்றி பெற்றன. ஆனால் சமீபகாலமாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறாததால் மீண்டும் கமர்ஷியல் பாதைக்கு திரும்பியுள்ளார்.

இனி கமர்ஷியல் மற்றும் கதாநாயகியை மையப்படுத்தி வரும் படம் என கலந்து கட்டி அடிக்க உள்ளாராம். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் மலையாள லூசிபர் ரீமேக் படம் உருவாக உள்ளது.

இந்நிலையில் மலையாள கதையை மாற்ற வேண்டாம் என மனைவி கதாபாத்திரத்தை தூக்கிவிட்டு வில்லனுக்கு மனைவி வேடத்தில் நடிக்க உள்ளாராம் நயன்தாரா. மஞ்சு வாரியர் மோகன்லாலுக்கு கூட பிறக்காத தங்கை வேடத்தில் நடித்திருப்பார்.

அதே பாத்திரம்தான் நயன்தாராவுக்கு. கடந்த வருடம் தான் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அவருக்கு மனைவியாக நயன்தாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!

hey