வவுனியாவில் கடும் மழையிலும் PCR பரிசோதனை முன்னெடுப்புவவுனியா நகரில் பி.சி.ஆர் பரிசோதனை

வவுனியா நகரில் இன்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைக்குப் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.

வவுனியாவில் இன்று காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது.
இதனையும் பொருட்படுத்தாமல் சுகாதார அதிகாரிகளினால் நேற்று விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்று காலை நகரில் பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பழைய பேருந்து நிலைய வர்த்தகர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளனர்.

இதேவேளை இன்றைய கடையடைப்பு முடக்கம் காரணமாக நகரின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்களில் ஊழியர்கள் வரவு மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றனர்.

இன்றைய வடகிழக்கு கடையடைப்பு காரணமாக அரச திணைக்களங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

hey