வவுனியாவில் கொரோனா அச்சம் காரணமாக பாடசாலை மாணவர்களின் வரவு குறைவுவவுனியா நகரின்

2021ம் ஆண்டு முதலாம் தவணைக்காக நாடு முழுவதும் இன்று (11.01) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 69 கொரோனா தொற்றாளர்கள் வவுனியா மாவட்டத்தில் இனங்காணப்பட்ட நிலையில் வவுனியா பாடசாலைகளில் மிகக் குறைந்தளவு மாணவர்களே பாடசாலைக்கு வருகைதந்துள்ளனர்.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக வவுனியா நகரின் பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி கந்தசுவாமி கோவில் வீதி , முதலாம் குருக்குத்தெரு, சூசைப்பிள்ளையார் குள வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி என்பன நேற்று காலை முதல் முடக்கப்பட்டு பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையுடன் இன்றையதினமும் நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக நகர பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை தமிழ் கலவன் பாடசாலை,

காமினி மகா வித்தியாலயம் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்படுள்ளமையுடன் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட போதிலும் கொரோனா அச்சம் காரணமாக மிக குறைந்தளவிலான மாணவர்களே பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

hey