வவுனியாவில் 8 மணித்தியாலமாக தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புவவுனியாவில்

வவுனியாவில் இன்று (11.01.2021) காலை 5.30 மணி தொடக்கம் 1.30 மணி வரை தொடர்ச்சியாக பெய்த கடும மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் பல மக்களின் வீடுகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

சுமார் 8 மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி , நூலக வீதி , வைரவப்புளியங்குளம் , பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அத்துடன் பூந்தோட்டம் சிறிநகர் , உக்கிளாங்குளம் , நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கு மேற்பட்டவர்களின் வீடுகளின் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் அவர்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.

hey