வவுனியாவில் நாளையதினம் 06 பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது : வெளியாகிய அறிவிப்புகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் நாளை 06 பாடசாலைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், காமினி தேசிய பாடசாலை, தமிழ் கத்தோலிக்கக் கலவன் பாடசாலை, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாசம் மற்றும் முஸ்லிம் மகா வித்தியாலயம் இவ்வாறு மூடப்படுகின்றதாக வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

இந்த பாடசாலைகளை மீள திறக்கின்ற திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை அம்பாறை நகரிலுள்ள பாடசாலைகள் பலவற்றையும் நாளை திறக்காமலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-IBC TAMIL-

hey