வவுனியாவில் சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்த தினத்தினை முன்னெடுத்து நினைவுத் தூபி சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்புசுவாமி விவேகானந்தரின்

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது பிறந்ததினம் நாளைய மறுதினம் (12.01.2021) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் அவர்களின் ஆலோசனைக்கமைய நகரசபை ஊழியர்களினால் இன்று (10.01) காலை சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபி தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப்பட்டது.

சுவாமி விவேகானந்தரின் 158 ஆவது பிறந்ததினம் நகரசபையின் தலைமையில் நாளைமறுதினம் (12.01) காலை 8.30 மணியளவில் அன்னாரின் நினைவுத்தூபியடியில் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey