வவுனியா பட்டாணிச்சூரில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் முடிவுகள் வெளியாகியதுவவுனியா, பட்டானிச்சூர்

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தொகுதியினரின் பிசீஆர் முடிவுகள் நேற்று (09.01) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பட்டானிச்சூர் கிராமமும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய 140 பேரிடம் நேற்றுமுன்தினம் (08.01) பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் 100 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 40 பேரின் பிசீஆர் பரிசோதனைகள் மீளவும் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா நகரில் 204 பேருக்கு மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் நேற்றுமுன்தினம் (08.01) 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hey