புடவையில் மூக்குத்தி அம்மன் பட நடிகையின் அசத்தலான புகைப்படம் : வாயை பிளந்துபார்க்கும் ரசிகர்கள்நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி மற்றும் பலர் நடித்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது.

நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார் என்பதை விட சாமியின் பெயரை சொல்லி நடக்கும் பல குற்றங்களை வெளுத்து வாங்கினார். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் ஊர்வசிக்கு மகளாகவும், ஆர்.ஜே.பாலாஜிக்கு தெய்வா என்ற தங்கையாக நடித்தவர் ஸ்மிரிதி. தனுஷ் நடிக்கும் D43 படத்தில் அவரும் நடிப்பதாக வந்த செய்தி அனைவரும் அறிந்ததே.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இதனால் ஸ்மிரிதி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. தற்போது அவர் புடவை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார். புன்னகை ததும்பும் அவரின் இந்த முகம் பலரையும் கவர்ந்துள்ளது.

hey