வவுனியாவில் இருந்து காணாமல் போன கொரோனா தொற்றாளர்….!!



வவுனியாவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 55 கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியா மாவட்ட சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது

குறித்த நபர் நேற்றையதினம் வவுனியாவிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முதல் வவுனியா ஜும்மா பகுதி, வவுனியா- கடைத்தெரு, தர்மலிங்கம் வீதி மற்றும் பொதுச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 47,305 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

-Tamilwin-

hey