வவுனியாவில் PCR பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டுவவுனியா நகரில்

வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையினை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் மூடப்பட்டுள்ளது என எச்சரிக்கை அறிவித்தல் சுகாதார பிரிவினரினால் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா நகரப்பகுதியான பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 54 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 54 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் இன்று (09.01) காலை 10.00 மணி தொடக்கம் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி, கந்தசாமி கோவில் வீதி, முதலாம் குறுக்குத்தெரு, சூசைப்பிள்ளையார் வீதி என்பன பொலிஸாரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார பிரிவினரினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந் நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களை மூடும் நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் இவ் வியாபார நிலையத்தில் கடமைபுரிபவர்கள் பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் வரை இந்நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என்ற அறிவித்தல் சுகாதார பிரிவினரினால் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக ஒட்டப்பட்டு வருகின்றன.

hey