வவுனியாவில் வெ-டிக்காத நிலையில் கைக்கு-ண்டு மீட்பு



வவுனியா கனகராயன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட முதிரங்குளம் குளப்பகுதியிலிருந்து ஆர்பீஜி செல் மற்றும் கைக்கு-ண்டு ஒன்று நேற்று மாலை(07) மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள குளத்திற்கு அருகாமையில் வெ-டிபொருள்கள் இருப்பது தொடர்பாக இராணுவத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதியை சோதனையிட்ட நிலையில் ஆர்பீஜி செல் ஒன்றினையும், கைக்கு-ண்டு ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த வெ-டிபொருட்கள் இன்று செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey