யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலில்யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 305 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 736 பேர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, யாழ் மாவட்டத்தில் இன்று வரை 160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், இதில் 28 பேர் சிகிச்சையை முடித்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில், எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில், ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து யாழ் மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப மக்கள் செயற்படுவதன் மூலம் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey