வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்பூந்தோட்டம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில்,

பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதியவர் சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

hey