மன்னாரில் கடந்த செவ்வாய்க்கிழமை கா ணாமல் போன கிராம அலுவலகர் இன்று ச_டலமாக மீட்பு



கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சு-ழிக்குள் அ-கப்பட்டு கா ணாமல் போன கிராம அலுவலகர் இன்று வியாழக்கிழமை காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் ச டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போய் தற்போது ச-டலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தோமஸ்புரி கிராம அலுவலகர் பிரிவில் கிராம அலுவலகராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.

நான்கு கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆற்றில் குளிக்கும் போது போ-தையில் இருந்ததாகவும் குளித்த இடத்தில் மதுப் போத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் போது கிராம அலுவலகர்கள் ஆற்றில் குளித்த போது ஒரு கிராம அலுவலகர் கா-ணாமல் போனதோடு, ஏனைய கிராம அலுவலகர்கள் மீட்கப்பட்டனர்.

கா-ணாமல் போன கிராம சேவையாளர் நானாட்டான் கட்டைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளதோடு அவரை தேடும் பணி இரண்டு நாட்களாக இடம்பெற்றுள்ளது. கடற்படை மற்றும் வங்காலை, அரிப்பு கிராம மீனவர்களும் இணைந்து தே-டுதல்களை மேற்கொண்டனர்.

எனினும் கா-ணாமல் போனவர் மீட்கப்படவில்லை.இந்த நிலையில் இன்று காலை அரிப்பில் இருந்து கடற் தொழில் நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் குறித்த ச-டலத்தை க-ண்டு அரிப்பு ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், அருவி ஆற்றில் காணாமல் போன கிராம அலுவலகர் அ-ரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் இருந்து ச-டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆற்று பகுதியில் குளிக்கச் சென்று பலர் உ யிரிழந்துள்ள நிலையில் அருவியாற்றில் குளிப்பது ஆ பத்தானது என நானாட்டான் பிரதேச சபையால் எ ச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி கிராம அலுவலகர்கள் உள்ளடங்களாக 6 பேரூம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். இந்த நிலையிலே குறித்த அ னர்த்தம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

hey