புத்தாண்டினை முன்னிட்டு கடந்த வருடம் போன்று எந்தவொரு விருந்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என சுகாதார பிரிவு எச்சரிக்கைபுத்தாண்டினை முன்னிட்டு கடந்த வருடம் போன்று எந்தவொரு விருந்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என சுகாதார பிரிவு, பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு செயற்படுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் சில கொரோனா பரவல்கள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையானது கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு நிலைமையாகும்.

இன்றும் நாளையும் மக்கள் ஒன்று கூடி விருந்து நடத்துவது, நிகழ்ச்சி நடத்துவது போன்ற விடயத்தை தவிர்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளர்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

hey