வவுனியாவில் இராணுவத்தினரால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான இரண்டாம் கட்டமாக நேர்முகத் தேர்வுவவுனியாவில்

புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வின் இரண்டாம் கட்டம் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று (30.12.2020) காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர்.

இதன் முதற்கட்ட நேர்முகத்தேர்வுகள் நிறைவடைந்து அதில் சிலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இரண்டாம் கட்டமாக 200 பேருக்கான நேர்முக தேர்வுகள் நேற்றும் இன்றும் வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக ஒரு அரச உத்தியோகத்தரும் இரண்டு இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர்.

வவுனியா பிரதேச செயலகத்திலும் நேர்முக தேர்வுகள் பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.

hey