வவுனியாவிற்குள் நுழையும் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் வைத்திருத்தல் கட்டாயம் : வெளியாகிய அறிவிப்பு



வவுனியா மாவட்டத்தின் கொரோனா தொற்று நிலைமைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் காதார் மஸ்தான், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மகேந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொரறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு, வவுனியா கமநல திணைக்கள பணிப்பாளர் இ.விஜயகுமார், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களுடன், வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.P.M.A.அசங்க காஞ்சனகுமார, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள், இலங்கை போக்குவதத்துச்சபை ஊழியர்களின், சுகாதார பிரிவினர், வர்த்தகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் வெளிமாவட்டத்திலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் பி.சீ.ஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியமாக்கப்படுவதுடன், விடுமுறையில் ஊர்களுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பி.சி.ஆர் மேற்கொள்ளுதல், கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகளுக்கு ஒரே சாரதி, நடத்துனர்களை சேவையில் ஈடுபடுத்துதல், முகக்கவசம் கட்டயாப்படுத்துதல் போன்ற பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

hey