வவுனியா வைத்தியசாலையில் மருத்துவர்கள் உட்பட 23 பேர் தனிமைப்படுத்தலில்கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாமார பணியாளர்கள் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வவுனியா, உலுக்குளம், ஜன உதா கிராமத்தை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து, அவர் சிகிச்சை பெற்ற வவுனியா வைத்தியசாலையின் மருத்துவர்கள் உட்பட ஊழியர்கள் இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சத்திர சிகிச்சை மருத்துவர் உட்பட 5 மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட 18 சுகாதார ஊழியர்கள் என 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றால் இறந்த பெண் வசித்து வந்த உலுக்குளம் ஜன உதான கிராமத்தில் வசித்து வரும் சுமார் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் சென்று வந்த இடங்களை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

hey