வவுனியா வைத்தியசாலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புவவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மரணமானதையடுத்து குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற வகையில் வவுனியா வைத்தியசாலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் மரணமானதையடுத்து நோயாளர் விடுதியில் தங்கியிருந்த 73 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் மரணமானதையடுத்து குறித்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் குறித்த பெண் தங்கியிருந்த நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்றோர் என 73 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை வெள்ளிக்கிழமை இரவு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அவரை கொரோனா மேலதிக சிகிச்சைக்காக நேற்று மாலை அனுராதபுரம் மித்சிறிசெவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள்,12 தாதியர்கள் 9 உதவியாளர் பேர் என 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் அனுராதபுரம் பகுதியில் உள்ள வைத்தியசாலை விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பெண் தங்கி சிகிச்சை பெற்ற நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற 47 நோயாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.வவுனியா வைத்தியசாலையில் நோயாளர் விடுதி இலக்கம் 8 மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த பெண்ணுக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற வகையில் வவுனியா வைத்தியசாலைக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார்.

hey