வவுனியாவில் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்வவுனியாவில்

கொரோனா தொற்று காரணமாக மரணமடையும் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்களை எதிர்ப்பதற்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம் முன்பாக வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

உலக நாடுகளில் கொரோனாவால் மரணமடைபவர்களை அவர்களது சமய சம்பிரதாயப்படி அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் இலங்கையில், பிறந்த 20 நாளான குழந்தை மற்றும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதானது அம் மக்களின் மார்க்கத்தை மீறும் செயலாகும். எனவே சர்வதேச சமூகமும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கமும் கவனம் செலுத்தி இந்த நாட்டின் சிறுபான்மை சமூகமாகிய முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கைகளில் வெள்ளை துணிகளை கட்டியவாறும், எரிக்காதே எரிக்காதே முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்காதே, அரசே உன் தாகத்திற்கு எம் தேகமா விருந்து, என் அநீதி ஆட்சிக்கு எம் சாம்பலே சிறந்த சாட்சி, அடக்கம் என்பது உலக நியதி எரிப்போம் என்பது உன் வியாதி என ஜனாசா எரிப்பதற்கு எதிரான பதாதைகளை தாங்கிய வாறும் ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி, அப்துல் லரீப், மற்றும் பள்ளிவாசல்களில் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

hey