வவுனியாவில் அமைதியான முறையில் இடம்பெற்ற பாலன் பிறப்பு வழிபாடுகள்



வவுனியாவில்

வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் அமைதியான முறையில் பாலன் பிறப்பு நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

அந்தவகையில், வவுனியா குடியிருப்பு கிறிஸ்தவ தேவாலயமான தூய ஆவியானவர் ஆலயத்தில் ஆலயத்தில் ஆலய தந்தை அருட்பணி தயாளன் அவர்களின் தலைமையில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று, வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய கிறிஸ்தவ ஆலயங்களிலும் பாதுகாப்புக்கு மத்தியில் பாலன் பிறப்பு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் சிறப்பாக இடம்பெற்றதுடன் கொரோனா தொற்று அச்சம் காரணமாக சில கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டுள்ளமையும் இடம்பெற்றிருந்தன.

hey