வவுனியாவில் கொரோனா அச்சத்தின் மத்தியிலும் களைகட்டும் நத்தார் பண்டிகைகால வியாபாரம்



வவுனியாவில்

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும்.

இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இப்பண்டிகை இலங்கை உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. .

நாட்டில் கோவிட்-19 இன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் வவுனியாவில் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு நகரில் புத்தாடைகள் கொள்வனவில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

நத்தார் பண்டிகை நாளைய தினம் (25.12.2020) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் நத்தார் பண்டிகை புத்தாடை வியாபாரங்கள் ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மிகமிகக் குறைந்தளவிலான மக்களே நத்தார் பண்டிகைக்கு புத்தாடைகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமையில் வெளிமாவட்ட மக்களும் வவுனியா நகரில் புத்தாடை கொள்வனவிற்கு வருகை தருகின்ற போதிலும் தற்போதைய கோவிட் – 19 சூழ் நிலையில் வவுனியா மாவட்ட மக்கள் மாத்திரமே புத்தாடை கொள்வனவு செய்வதினை காணக்கூடியதாவுள்ளது.

hey