சற்றுமுன் வெளியாகிய தகவல் கிளிநொச்சியில் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிகிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த வாகன சாரதிக்கே தொற்று உறுதியாகியது.

கிளிநொச்சியில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவரே இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

கிளிநொச்சியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் பாரஊர்தி சாரதியொருவரின் மாதிரியும் பெறப்பட்டது. அவர், கிளிநொச்சி பாரதிபுரம், வை.எம்.சி.ஏ வீதியில் வசிப்பவர். பசளை ஏற்றுவதற்காக தென்பகுதிக்கு சென்று வருபவர்.

அவரைது மாதிரியை சோதனையிட்டபோது, முடிவு தெரியாத நிலையேற்பட்டது. மீளவும் அவரது மாதிரி சோதனைக்குட்படுத்தப்படும். இந்தவகையான முடிவு கிடைப்பவர்கள் இரண்டாவது சோதனையில் தொற்றாளர்களாகவே பெரும்பாலும் அடையாளம் காணப்படுவார்கள்.

இந்த நிலையில மீண்டும் இன்று நடத்தப்பட்ட சோதனையில், அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

இதேவேளை, அவரது வீட்டில் உள்ளவர்கள் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் அவரது மகனுக்கும், இன்னொரு குடும்ப உறுப்பினருக்கும் நேற்று தொற்று உறுதியானது.

hey