வவுனியாவில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு தடைவவுனியா நகரப் பகுதியில்

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கைகளுக்கு வவுனியா நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தாக்கத்தை கருத்திற்கொண்டு வவுனியா நகரசபையினரினால் இந்த நடவடிக்கை இன்று (21.12.2020) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் வீதியோர வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நகரசபையினரினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் நகரசபையின் தடையுத்தரவினை மீறி வீதியோர நடவடிக்கையி்ல் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நகரசபையினர் விசேட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது வீதியோரத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மரக்கறிகள் , பொருட்களை நகரசபையினர் ஏற்றிச்சென்றதுடன் அவர்களுக்கு தண்டப்பணமும் விதித்தனர்.

hey