வவுனியா மாவட்டத்தில்
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் முகக்கவசமின்றி வீதியில் பயணித்த 15க்கும் மேற்பட்டவர்கள் எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
எம்மை பாதுகாக்க தலைக்கவசம் அணிவது எவ்வாறு கட்டாயம் ஆக்கப்பட்டதோ அதே போன்று எம்மையும் மற்றவர்களையும் கோவிட் – 19 வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிசாருடன் சுகாதார பிரிவினர் இணைந்து இன்று (21.12.2020) காலை வவுனியா மன்னார் வீதியில் முகக்கவசமின்றி பயணித்த பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் மூன்று மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட இவ் விசேட நடவடிக்கையில் 15 க்கும் மேற்பட்டவர்கள் மீது வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது.