வவுனியா மாவட்ட மக்களுக்கு பண்டிகை காலங்கள் தொடர்பில் வர்த்தக சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை



பண்டிகை காலத்தில்

வவுனியா மாவட்ட மக்கள் அனைவரும் எதிர்வருகின்ற நத்தார் , புதுவருட பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்த வண்ணம் அவதானமாக செயற்படுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் மாத்திரம் 13 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இனிவருகின்ற காலங்களில் பொதுமக்கள் , வர்த்தகர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்

எதிர்வரும் நாட்களில் நத்தார் மற்றும் புது வருடக்கொண்டாட்டங்கள் வருகின்றன இந்த காலப்பகுதிகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மற்றும் மதத்தலைவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி தங்களுடைய கொண்டாட்டங்களைச் செயற்படுத்த வேண்டும். என்பதுடன் சுகாதார பிரிவினர் , பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுங்கள்

மேலும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடுதலைத் முடிந்தளவு தவிர்த்து கடந்த வருடக்கொண்டாட்டங்களைப் போலல்லாது இம்முறை தற்போது உள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இவ்வருட நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களைச் செயற்படுத்துங்கள். கொரோனாத் தொற்று மேலும்பரவாது தடுப்பதற்கு நாம் அனைவரும் சுகாதாரப் பகுதியினருக்கு ஒத்துழைத்துச்செயற்பட வேண்டும்

அத்துடன் வவுனியாலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் , ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் மேலும் சுகாதார நடைமுறையினையினையும் பின்பற்றுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

hey