வவுனியா வர்த்தகர்களே எச்சரிக்கை : மலத்தியன் கிருமிநாசினி என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் கோதுமை மாவவுனியா பண்டாரிக்குளம்

வவுனியா பண்டாரிக்குளம் உட்பட பல பகுதிகளில் மலத்தியன் கிருமிநாசினி என தெரிவித்து கோதுமை மாவினைவினை வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு இன்றையதினம் முச்சக்கரவண்டியில் வருகை தந்த சிலர் தம்மை மலத்தியன் கிருமிநாசினி விநியோகஸ்தர் என அடையாளம் காட்டியியுள்ளனர். அதன் பின்னர் மலத்தியன் கிருமிநாசினியினை தாம் தற்போது குறைந்த விலையில் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்து வருவதாக தெரிவித்த அவர்கள் 10 கிலோகிராம் மலத்தியன் கிருமிநாசியினை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர்.

அவர்கள் சென்றதன் பின்னர் குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் அவர்களை வழங்கிய மலத்தியன் கிருமிநாசினியினை திறந்து பார்வையிட்ட சமயத்தில் குறித்த பையிலுள் கோதுமை மாவினுள் சிறிதளவு மலத்தியன் கிருமிநாசினியினை கலந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மலத்தியன் (கிருமிநாசினி) விற்பனை செய்த நபர்களின் முச்க்கரவண்டி இலக்கம் , அவர்களின் புகைப்படங்கள் என்பன வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது.

மலத்தியன் (கிருமிநாசினி) எனும் பேரில் கோதுமை மாவினை விற்பனை செய்த இவ்வாறான சம்பவங்கள் வவுனியா மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey